கிராம உத்தியோகத்தர்கள் தரம் மூன்றிற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த திங்கட்கிழமை தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார் தெரிவித்தார். இம்மாதம் 29 ஆம் திகதி வரை பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதோர் உடனடியாக திணைக்களத்தை தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளார்கள்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உடனடி தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் பரீட்சார்த்திகளுக்கு தொடர்புகொள்ளலாம்.

கருத்துரையிடுக

 
Top