(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச மட்ட திவிநெகும சிறுவர் கலை, கலாசார போட்டி நிகழ்வு நேற்று (17) கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பாடல், சித்திரம் , நடடார் பாடல், அறிவிப்பு, சிறுவர் கதை, நடனம், கிராமிய  நடனம், பேச்சு, குறு நாடகம் ஆகிய நிகழ்வுகளில்  29 பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேச செயலக  திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசத்தின் ஒருங்கிணைப்பிலும், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடுவர்களாக ஆசிரிய ஆலோசகர் கே.சாந்தக்குமார், ஆசிரியர்களான ஏ.ஏ.எம்.ரஸீன்,எம்.எம்.ஏ.ஹக்கீம், முகாமைத்துவ உதவியாளர் திருமதி எஸ்.கைலேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top