நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம்(20) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று(19) கல்வியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள மழை, வௌ்ளம், மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்களினாலேயே பாதுகாப்பு கருதி இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top