மே தினம் (01), ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வந்தமையால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்காது, புனித வெசாக் தினமும் வார இறுதி நாட்களில் வருகின்றமை கருதி மே 23 ஆம் திகதி பொது விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
 
ஆயினும் அது குறித்து அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், உத்தியோகபூர்வமாக தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இலங்கையில் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, அத்தியவசியமாகியுள்ள அரச சேவை கருதி, நாளை திங்கட்கிழமை (23) வழங்கப்படவிருந்த அரச பொது விடுமுறையை இரத்துச் செய்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

 
Top