கல்முனை மாநகர சபை  பொது நூலகம் முன்பாக பயணிகளுக்கு நிழல் கொடுத்த மரம் இனந்தெரியாதவர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. இந்த நிழல் மரத்தை தூர இடங்களுக்கு பயணிக்கும் மக்கள் பயன் படுத்தி வந்ததுடன் முச்சக்கர வண்டி சாரதிகளும் இவ்விடத்தைப் பயன் படுத்தி வந்தனர்.
நேற்றிரவு இனந்தெரியாதவர்களினால் இந்த மரம் வெட்டப் பட்டுள்ளது  இதனால் இவ்விடத்தைப் பயன் படுத்தும் முச்சக்கரவண்டி சாரதிகளும் , பயணிகளும் பல சிரமங்களை  எதிர் கொண்டுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெப்ப காலம் நிலவுவதால் கல்முனை நகரில் நிழல் தேடி மக்கள் அலைகின்றனர் . இந்த மரம் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமாக இருந்த போதிலும் மாநகர சபைக்கு தெரியாமல் வெட்டப் பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கிடையில்  ஏற்பட்டுள்ள முரண்பாடே  இம்மரம் வெட்டக் காரணம் என தெரிய வருகிறது .எனினும்  இன்னும் இதற்கான நடவடிக்கை கல்முனை மாநகர சபையால் எடுக்கப் படவில்லை என  முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால்  தெரிவிக்கப் பட்டுள்ளது .கருத்துரையிடுக

 
Top