SM சபீஸ்

இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் பெற்றுத்தந்த நமது பெரும்தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் பிறந்து வாழ்ந்த பெருமைக்குரிய கல்முனை மண்ணில் வாழும் எமது உடன் பிறப்புக்களே, உங்கள்மீது இறைவன் அவனது அருளை பொழிய பிரார்த்தித்தவனாக
பழமைவாத சிந்தனைகளுக்குள்ளும், இத்துப்போன காலாவதியான யோசனைக்குள்ளும் எமது மக்களை உணர்ச்சி ரீதியாக தள்ளி, ஊர்வாதத்தை உண்டுபண்ணி, சிந்திக்க வைக்கும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும் சதிகாரர்களின் சூழ்சிகளை, கல்வியால் முன்னேறிய மாநகரத்து மக்களாகிய நீங்கள் எமது உடன்பிறப்புக்கள் அறிந்து சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள்தான் என தம்பட்டம் அடித்துக்கொண்டு பங்காளிகட்சி என்ரபேரோடு இருக்கும் கௌரவ ஹகீம் நகர அபிவிருத்தி அமைச்சும் அதன்கீழ் காணி கையகப்படுத்தல் காரியாலயத்தையும் வைத்துக்கொண்டிருந்த போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலத்தினை கையகப்படுத்தி அம்மக்களுக்கு விடிவு பெற்றுக்கொடுக்காதது ஏன்?
மயோன் முஸ்தபாவின் முயற்சியில் கொண்டுவரப்பட்டு பேரியல் அஸ்ரப் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காரியாலயம் தரமுயர்தப்படாமலும், நிரந்தர கட்டடம் இல்லாமலும் இன்னமும் ஒரு தனியார் ஒழுங்கையில் இருப்பதனை கௌரவ ஹகீம் கண்டு கொள்ளவில்லையா?
கிழக்கு மாகாணசபை முதல்வர் தனக்குள்ளும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஒரு முஸ்லிமாகவும் இருக்கத்தக்கதாக அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் 20 உள்ளூராட்சி சபைகளில் 11 உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ் மொழியில் இயங்குவதால் இவற்றுக்கான உதவி உள்ளூராட்சி ஆணையாளர் காரியாலயம் ஒன்றை கல்முனையில் நிறுவுவதற்கு கௌரவ ஹக்கீமுக்கு திராணி இல்லாமல் போனது ஏன்?
புதிய நீதிமன்ற கட்டடத்துக்காக கல் நடப்பட்டு பலவருடங்கள் கடந்த நிலையில் கௌரவ ஹக்கீமால் இதுவரைக்கும் ஒரு ரூபாய் ஏனும் நிதிஒதுக்கீடு செய்ய முடியவில்லையா?
அம்பாரை மாவட்டத்தில் சிறப்பானதொரு மைதானம் இல்லாமலும் சந்தாங்கேணி மைதானம் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் காணப்படுகின்றபோது கல்முனையில் தரமான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்க வேண்டும் என கௌரவ ஹகீம் நினைக்காதது ஏன்?
நமது மாவட்டத்தில் தலைவரால் பேரம்பேசி பெறப்பட்ட முதல் மாநகரமான கல்முனை மாநகரம் குப்பைகள் தேங்கிக்கிடக்கும் ஒரு நகரமாக மாறிக்கொண்டு வரும் இவ்வேளையில் அனுபவமும் மூத்த போராளியும் மறைந்த மாமனிதரோடு கைகோர்த்து இருந்த சகோதரர் முழக்கம் மஜீத் அவர்களுக்கு முதல்வர் பதவியை கொடுக்காமல், மாதத்தில் ஒருமுறை அதுவும் காலையில் நீதிமன்ற அலுவல்களுக்கும் மாலையில் மாநகர சபை கூட்டத்துக்காகவும் நேரம் ஒதுக்கி விஜயம் மேற்கொள்ளும் நிசாம் காரியப்பரை முதல்வர் பதவி கொடுத்து வைத்திருப்பது ஏன்?
அதாஉல்லா அமைச்சராக இருக்கும்போது கல்முனை மாநகர புதிய கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் பணத்தினை எடுக்கவிடாமல் தடுத்த கௌரவ ஹகீம் ஏன் அம்மானகரசபைக்கு புதிய கட்டிடத்தை வழங்கவில்லை?
நாங்கள் ஒருபோதும் பிரதேசவாதம் பேசியது கிடையாது அதனை கல்முனையை சேர்ந்த ஆரிப் சம்சுடீனுக்கும், மருதமுனையை சேர்ந்த துல்கர் நஈனுக்கும் வாக்களித்து அரசியல் அதிகாரம் கொடுத்து நிருபித்திருக்கிறோம்.
ஒருபிரதேசத்தின் கோலாச்சும் இடமாக பிரதேச செயலகம் காணப்படுகிறது ஆனால் கல்முனை பிரதேச செயலகம் இன்னமும் கல்முனை மாநகர சபைக்குள் இயங்குவதை கௌரவ ஹகீம் காணவில்லையா?
இவ்வாறான கேள்விகள் மக்கள் மத்தியில் தோற்றம் பெறாமல் மயக்க நிலையில் வைத்திருப்பதே கௌரவ ஹகீம் செய்யும் பிரதேசவாத தூண்டல் தந்திரமாகும்
எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல். மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றாமல் உணர்ச்சிகளை தூண்டி எமதுமக்களின் வாகுரிமைகளை சூரையாடிகொண்டு சென்றுவிடுகின்றார் இந்த கௌரவ ஹகீம்.

இதற்காக திட்டமிட்டு தூண்டப்பட்டதே அக்கரைப்பற்று பிராந்திய நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபை காரியாலயதின் பிரிப்பு முயற்சியாகும்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதனூடாக சகல கிராம மக்களுக்கும் நிம்மதியான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தவேண்டும் எனக்கருதியவர் எமது பெரும்தலைவர் அஸ்ரப் அவர்கள், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை உருவாக்கி அதன் கலைப்பிரிவு ஓரிடத்திலும் விஞ்ஜான பிரிவு இன்னோர் இடத்திலும் இருக்கும்போது இரண்டு கிராமங்களும் முன்னேறும் என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தவர் மறைந்த நமது தலைவர்.
பல நிறுவனங்களின் பிராந்திய காரியாலயங்களும், நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய பொறியியலாளர் காரியாலயமும் கல்முனையில் இருக்கத்தக்கதாக அக்கரைப்பற்றில் உள்ளவைகளையும் பிரித்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கு ஒருபோது எமது கல்முனைவாழ் உடன்பிறப்புக்கள் விரும்பமாட்டார்கள்.
அனால் உண்மையை மறைத்து கல்முனைக்கு வரவிருந்த பிராந்திய காரியாலயத்தை அக்கரைப்பற்று மக்கள் தடுக்கின்றனர் என்ற பகையை உண்டுபண்ணி அதனூடாக தனக்கு வாக்குச் சேர்க்கும் முயற்சியில்தான் ஹகீம் இந்த காரியத்தை முன்கொண்டு வந்தார்.
இதற்கு நல்லதோர் உதாரணம்தான் கல்முனையில் இயங்கிய வேலை வாய்ப்பு பணியாக காரியாலயத்தை தக்கவைத்து கொள்ள முடியாத முடவர்களாக இருந்த மு கா தலைமையின் இயலாமை.
எமது மக்களின் சீதோஷ்ண பூகோள அமைப்புக்களை தெரியாத ஹகீம் எமது மக்களுக்கு ஒருபோதும் விடிவு பெற்றுக்கொடுக்கமாட்டார்.
தென்கிழக்கின் முகவெத்திலையான கல்முனையின் உடன்பிறப்புக்கள் கடந்தகாலங்களில் தியாக உணர்வுகளோடு சமூகத்துக்காக பலபோராட்டங்களை நடத்தியவர்கள் இப்படிப்பட்ட மக்களைகௌரவ ஹகீம் ஏமாற்றிவிட்டு செல்ல நீங்கள் அனுமதிக்கலாமா?
பிச்சை கேட்கும் சம்பந்தனிடம் பிச்சை போடுங்கள் என்று கேட்காமல் நமது உரிமைகளையும் உடமைகளையும் வென்றிட ஓரணியில் இனைந்திடுவோம்

கருத்துரையிடுக

 
Top