(யு.எம்.இஸ்ஹாக்)

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள  மகுடம் சூட்டும் மகிழ்ச்சிப் பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24) நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடை பெறவுள்ளது .

கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை பெறவுள்ள இவ்விழாவில்  கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்..நஸீர்  பிரதம அதிதியாகவும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நற்பிட்டிமுனை கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவித்தல்,துறைசார் உயர் பதவிகளில் பணியாற்றுபவர்களை கௌரவித்தல், 2015ஆம் ஆண்டு அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களை கௌரவித்தல் , கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர்கள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் சிதியடைந்தவர்களை  கௌரவித்தல்  போன்ற நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன .
மர்ஹூம்  தமிழாசான் ஏ.காசிம் பாவா  நினைவரங்கி நடை பெறவுள்ள நிகழ்வில்   விசேட அழைப்பாளராக  கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ.சமது  கலந்து சிர்ப்பிக்கவுள்ளதுடன் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் ,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்  ஏ.எம்.சக்காப்  ஆகியோரும் , சிறப்பு அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் ,சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் ,கிழக்கு மாகாண  கால்நடை சுகாதார திணைக்கள மேலதிக மாகாணப் பணிப்பாளர் எம்.சி.எம்.ஜுனைட் ,அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் ஏ.எல்.நசீர்கனி  ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர் .

கருத்துரையிடுக

 
Top