கல்முனை மாநகர சபை உறுப்பினரம் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான  சி.எம்.முபீதின்  அழைப்பில் நாளை நட்பிட்டிமுனைக்கு வரகை தரவுள்ள  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு  தையல்  இயந்திரமும் ,சான்றிதழும் வழங்கி வைக்கவுள்ளார் .

அமைச்சரின் இணைப்பாளரும், கட்சியின் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான  அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக அபிவிருத்தி அமைப்பின்  தலைவருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில்  6மாத கால தையல்   பயிற்சியை முடித்த 100யுவதிகளுக்கு சான்றிதழ்  வழங்கப் படுவதுடன் 40 யுவதிகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கப் படவுள்ளன .

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும்,அரச வர்த்தக கூட்டுத்தாபனகளின் தலைவரும் முன்னாள் மாகான சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல்,கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைதீன் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்ரூப் ,அனுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் , புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நவவி ஆகியோரும் நிகழ்வில்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


கருத்துரையிடுக

 
Top