யு.எம்.இஸ்ஹாக் 
நல்லாட்சியின் பின்னர் நாட்டிலுள்ள அனைத்து நீதி மன்றங்களும் சுயாதீனமாக செயற்படுவதாகவூம், நீதித் துறைக்குள் அரசியல் ஆதிக்கம் செலுத்தப் படுவதில்லையெனவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ  இன்று கல்முனையில் தெரிவித்தார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பையேற்று  கல்முனை நீதி மன்ற வளாகத்துக்குச் சென்றிருந்த நீதி அமைச்சர் நீதிபதிகள்,சட்டத்தரணிகள் முன் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

கல்முனை சட்டத் தரணிகள் சங்கத்தின் தலைவர் எப்.எம்.அமீருள் அன்ஸார் மௌலானா தலைமையில் நடை பெற்ற இச்சந்திப்பில்  கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, மாவட்ட நீதிபதி வீ.ராமகமலன், நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ. பயஸ் ரஸாக் உட்பட நீதி அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நீதி மன்ற வளாகத்தின் தேவைகள் குறித்து  அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அதற்கான நடவடிக்கை எடுக்க செயலாளரைப் பணித்தார். கல்முனை நீதிமன்ற தேவையடங்கிய  மகஜர் ஒன்றும் சட்டத்தரணிகள் சங்கத்தால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.கருத்துரையிடுக

 
Top