இன்று காலமான பன்னூலாசிரியரும்மூத்த ஊடகவியலாளருமான  பீர் முஹம்மது புன்னியாமீன் அவர்களின்  மறைவுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம்  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதுடன்அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றதுக்காக  சம்மேளன  அங்கத்தவர்கள்  அனைவரையும் பிரார்த்திக்குமாறும் வேண்டியுள்ளது.

 இதுவரை சுமார் 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக,இலக்கிய,அரசியல்,  கல்விசார் திறனாய்வுக்  கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் இலங்கை முஸ்லிம்களின் தகவல்கள் மற்றும் ஆக்கங்களை ஒன்று சேர்ப்பதில் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.

ஆசிரியர் சேவையில் இணைந்து  தமது பொதுப் பணியை தொடர்ந்த இவர்  கல்லூரி அதிபர்மத்திய மாகாண சபை கல்வி கலாசார அமைச்சின் இணைப்பதிகாரிமத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் என பல துறைசார் பதவிகளை வகித்தவர்.
இவரின் மறைவானது வரலாற்றில்  ஊடகத்துறைக்கு மாபெரும் இழப்பாக அமைந்துள்ளது என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் மீராஇஸ்ஸதீன்  பொதுச் செயலாளர் எஸ்.எல்.அஸீஸ் ஆகியோரால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர் 

கருத்துரையிடுக

 
Top