ஹிஜா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு  வைபவமும் நேற்று நற்பிட்டிமுனை அல் - அக்ஸா  மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது.

கல்லூரின் பணிப்பாளர் டபிள்யு.ஐயூப்கான்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் -கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான சாமஸ்ரீ சத்தியஜோதி    கரீம் முகம்மது  ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைத்தார் .

ஆசிரியர்களான வை.ஏ.கே.தாசீம்,ஐ.எம்.சூபி உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

பிரதம அதிதியாக கலந்து கொண்ட  ஹலீம் அங்கு உரையாற்றும் போது.நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி வளர்ச்சி பின்னோக்கி செல்கின்றது இதற்கு பல காரணங்கள்  கூறப் படுகிறது. எது எவ்வாறு இருந்த போதிலும் நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் சகல மட்டத்தில் உள்ளவர்களும் அக்கறை காட்டி எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறந்ததாக மாற்றியமைக்க முன்வரவேண்டும் .

நற்பிட்டிமுனை கிராமத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளையும் இரு கண்ணாக கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை செய்து வருகின்றேன் . இதனை ஜீரணிக்க முடியாத சிலர் அரசியல் கண் கொண்டு பார்க்கின்றனர். அரசியல் தேவைப் படும் போது  அரசியலை செய்யலாம் . இப்போது எமது பிள்ளைகளின் கல்வித் தாகத்தைப் போக்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற இரண்டு மாணவர்களுக்கு பிரதம அதிதியால்  நினைவு சின்னம் வழங்கி வைக்கப் பட்டது .
நற்பிட்டிமுனை அல் -கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும், கைத்தொழில் வாணிகத்துறை அமைச்சரின் இணைப்பு உத்தியோகத்தரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான சாமஸ்ரீ சத்தியஜோதி    கரீம் முகம்மது  ஹலீம்  கல்விக்காக நற்பிட்டிமுனை கிராமத்தில் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப் பட்டார் கருத்துரையிடுக

 
Top