நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கள் , வீட்டுத்திட்டம்  வழங்குவதற்கு  ஊடக அமைச்சினால்  சுற்றுநிருபம் வெளியிடப் பட்டது . அதன்படி  தீர்வை அற்ற  சலுகை  அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை இன்று  (28) நடை பெற்ற  மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது .
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சம்மேளனத்தின் உப தலைவர்  கலா பூசணம் ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில்  இன்று காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பரை சந்தித்து ஊட்டகவியலாளர்களுக்கு  அநீதி  இழைக்கப் பட்டுள்ளதை தெரிவித்து  விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மாநகர முதல்வரினால் இன்று மாலை இடம்பெற்ற சபை அமர்வில் விசேட பிரேரணையாக  சமர்ப்பிக்கப்பட்டு சபை உறுப்பினர்களால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது .
கல்முனை மாநகர சபையில் எடுக்கப் பட்டுள்ள  இத் தீர்மானத்தினை எழுத்துமூலமாக ஜனாதிபதி , பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோருக்கு  உடனடியாக அனுப்பி வைப்பதெனவும்   சபையில் ஏகமானதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின்  நலன்கருதி அம்பாறை மாவட்ட ஊடகவியாலளார் சம்மேளம்  விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து  விசேட பிரேரணையாக  சமர்ப்பித்து சபையில் நிறைவேற்றிய  கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பருக்கும் , பிரதி முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும்  சங்கத்தின் தலைவர் கலா பூசணம் மீரா இஸ்ஸதீன் நன்றியை தெரிவித்துள்ளார் 

கருத்துரையிடுக

 
Top