கல்முனை உவெஸ்;லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (02) புதன்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் வீ. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன், ரீ.கலையரசன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.

நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 587 புள்ளிகளைப் பெற்று தில்லையம்பலம் இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 532 புள்ளிகளைப் பெற்று வில்ஷன் இல்லம் இரண்டாம் இடத்தையும், 437 புள்ளிகளைப் பெற்று நல்லதம்பி இல்லம் மூன்றாம் இடத்தையும் 388 புள்ளிகளைப் பெற்று யோகம் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.
இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் ஹரீஸ் இங்கு உரையாற்றுகையில்,
இன நல்லுறவை கட்டியெழுப்புவதில் விளையாட்டுத்துறையின் பங்களிப்பு மிகையாகாது. இன்று தமிழ், முஸ்லிம் நல்லுறவை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் தான் எமது இரு சமூகங்களின் எதிர்காலம் தங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top