கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 950 பேர் மேலதிகமாக இருந்தும் தேசிய ரீதியில் மாகாண அடிப்படையில் கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக 9வது இடத்திலேயே இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு 8வது இடத்துக்கேனும் கிழக்குமாகணம் வரவில்லையென்றால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியில் இருந்து நான் விலகுவேன் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான ஆரம்பக் கல்வி அபிவிருத்தியை நோக்கிய மாநாடு நேற்று முன் தினம்  சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாணக் கல்விப் பணிப்பாளர் அப்துல் நிஸாம் இதனை தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலயத்திலுள்ள சுமார் 600 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்ட முழு நாள் மாநாட்டில் மாகாண  உதவிக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் ,கல்முனை  வலயக் கல்வி அலுவலக  பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான ஏ.எல்.எம்.முக்தார் , எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை அரபாத், உட்பட கொட்டை கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top