பிரதி அமைச்சர் ஹரீஸ் சூளுரை 

 கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இன்று(2016/03/01)நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்,முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான  HMM.ஹரிஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஹிறா இல்லாம் முதலாம் இடத்தையும், சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், அரபா இல்லம் மூன்றாம் இடத்தையும் மர்வா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றது.

கல்லூரி முதல்வர் பீ.எம்.எம்.ஏ.பதுருதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கலந்து கொண்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் அங்கு உரையாற்றும் போது . பலவருடங்களாக மழை காலத்தில்  வெள்ளம் நிறைந்து நிற்கும் சாஹிரா  மைதானம்  புனரமைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதற்கான  நிதியும் அமைச்சில் உள்ளது. அடுத்த விளையாட்டுப் போட்டியோ அல்லது மைதானத்தில் நடை பெறும் ஏதாவது நிகழ்வோ திருத்தி அமைக்கப் பட்ட மைதானத்தில் நடை பெறும் என பிரதி அமைச்சர் அங்கு சூளுரைத்தார் .

நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதியாகவும் ,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ,சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.ரகுமான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும்  மற்றும் பலர் சிறப்பு அதிதிகளாகவும் ,விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .

நிகழ்வில்  பிரதம  அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கு  கௌரவிப்புகளும்  இடம் பெற்றன .

கருத்துரையிடுக

 
Top