மட்டுப் படுத்தப்பட்ட  நற்பிட்டிமுனை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின்  ஏற்பாட்டில் மக்கள்   பாதுகாப்பு  கருதி  முச்சக்கர வண்டிகளுக்கு  சங்க பெயர் பொறிக்கும் வேலைத் திட்டம் நேற்று ஆரம்பித்து  வைக்கப் பட்டது.

 சங்கத்தின் தலைவர் ஐ.தன்சீல் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய  போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சனத் குமார ,கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான குமுதினி ஜெகதீசன் ,ஜெகநந்தினி  போக்குவரத்து பொலிஸ்  உத்தியோகத்தர் ஹிதாயத்துல்லா ஆகியோர் உட்பட சங்க அங்கத்தவர்கள் பலரும்   நிகழ்வில் கலந்து கொண்டனர் .
முச்சக்கர வண்டி பயன்படுத்துவதில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப் பட்டு பொலிஸ்  பொறுப்பதிகாரியிடம் முன்வைக்கப் பட்டது.
கருத்துரையிடுக

 
Top