( எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனைக் கடற்கரைப்பள்ளி வாசல்  194ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நேற்று மாலை ம ஆரம்பமானது.

இஸ்லாமிய பெரியார் சங்கைக்குரிய சஹுல் ஹமீத் வலியுள்ளா அவர்களின் ஞாபகார்த்தமாக வருடாந்தம் கல்முனைக் கடற்கரைப்பள்ளியில் இவ்விழா இடம் பெறுவது வழமையாகும்.

இதற்கமைய நேற்று (10) மாலை கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கடற்கரைப்பள்ளி முன்பாக அமைந்திருக்கும் 7 தட்டு மினராவிலும் 3 தட்டு மினராவிலும் கொடிகள் ஏற்றப்பட்டு துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.

தொடர்ந்து  12 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும் அதே வேளையில் ஒவ்வெரு நாளும் இஷாத் தொழுகையின் பின் மெளலித் ஓதப்பட்டு மார்க்க உபன்னீயாசங்கள் இடம் பெறுவதுடன் அன்னதான நிகழ்வுகளும் இடம் பெறுவது வழமையாகும்
கருத்துரையிடுக

 
Top