ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் அப்துல் ஹமீட் அப்துல் பதாஹ் கே. அல் முல்லாஹ் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி வி.டி.தமிழ்மாறன் சிறப்புரையாற்றவுள்ளார்.ஒரு அமர்வாக இடம்பெறும் இந்த நிகழ்வின் இறுதியில் அடுத்த வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

 
Top