நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுதலுக்கு இணங்க  மர்ஹூம் ஏ.எல்.கரீம் (பதிவாளர்)  அவர்களின் நினைவாக  பாடசாலையில் கட்டி முடிக்கப் பட்ட  கொடிக்கம்ப மேடை  தேசிய சுதந்திர தினமான நாளை தேசியக் கொடி  ஏற்றி திறந்து வைக்கப் படவுள்ளது.

வித்தியாலய அதிபர்  ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  இடம் பெறவுள்ள நிகழ்வில்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினரும்  கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நாளை  வியாழக் கிழமை 04.02.2016  திறந்து வைக்கவுள்ளார் .

இவ்வைபவத்தில்  பிரதி அதிபர் ,ஆசிரியர்கள்  உட்பட  பெற்றோரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் மற்றும் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன் போது  தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி ,பிரதமர்  உள்ளிட்ட  நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு துஆ பிரார்த்தனையும் , நினைவு தின மர  நடுகை வைபவமும் , கல்லூரியில் கல்வி கல்வி பயிலும் 
முதலாம் தர மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப் படவுள்ளது 





கருத்துரையிடுக

 
Top