(பீ.எம்.எம்.ஏ.காதர்)
இந்தியாவின்“ஏ”தரத்திலான பொறியியல்துறை,தொழில் நுட்பத்துறையின் முன்னோடி பல்கலைக் கழகமான சென்னை பீ.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டில் இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதியும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதுடன் ஒரு அமர்வுக்கு தலைமையும் தாங்குகின்றார்.
இந்த ஆய்வு மாநாடு 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக் கழகப் பேராசிரியர் வீ.எம்.பெரிய சாமி தலைமையில் பல்கலைக் கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது ‘குடும்பவியல் வாழ்வும் பிரச்சிகைகளும் இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளும்” என்ற தொனிப் பொருளில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறுகின்றது.
இம் மாநாட்டில் மலேஷய சர்வதேச பல்கலைக் கழக பேராசிரியர் தமீம் உஸாமா,சவூதி அரேபியாவின் உம்முல் குரா பல்கலைக் கழக பேராசிரியர் ரமடான் அப்துஸ் ஸாதிக் ஆகியோர் பேருரைகளையும்,இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதியும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன் வாழ்த்துரையையும் வழங்கவுள்ளனர்.
இதில் மலேஷியா,புரூனை,பாக்கிஸ்தான்,பங்களாதேஸ்;,இந்தியா,இலங்கை உள்ளீட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 60பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள்,பல்கலைக் கழக கல்வியலாளர்கள் 58 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். ஏழு அமர்வுகளாக நடைபெறவள்ள இந்த ஆய்வு மாநாட்டில் அனைத்து நிகழ்வுகளும் ஆங்கிலம்,அறபு மொழிகளிலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தககது.

கருத்துரையிடுக

 
Top