யு.எம்.இஸ்ஹாக் 

மருதமுனையை  சேர்ந்த பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்  எழுதிய  "இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப் படும்  சவால்கள்"  என்ற நூல் வெளியீட்டு விழா  இன்று  ஞாயிற்றுக் கிழமை (2016.02.07)  காலை 10.00 மணிக்கு  மருதமுனை  நூலக மேல் மாடியில் நடை பெற்றது. .

முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர்  சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜமீல்  தலைமையில்  வவுனியா மாவட்ட நீதிபதி ரீ.எல்.ஏ.மனாப் ,தென்கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.எம்.முகம்மது நவாஸ்,கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல்  ஆகியோரின் முன்னிலையில் வெளியீட்டு விழா இடம் பெற்றன 
நிகழ்வில் விசேட அழைப்பாளராக   கிழக்குமாகாண  கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் எம்.சி.அன்சார்   கலந்து கொண்டார் 
வரவேற்புரையை கவிஞர்  ஜமீல்   நிகழ்த்த கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ்  நூல் அறிமுகம் செய்தார்  . சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் ,விரிவுரையாளர்  ஏ.எம்.ரியாஸ் அஹமட் ஆகியோர் நூல் பற்றி உரையாற்றினர்  . நூல் விமர்சனத்தை  விமர்சகர்  சிராஜ் மஷூர்  நிகழ்த்தினார்  .
நூலின் முதல் பிரதியை  கல்முனை பிரதேச செயலக  பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.ரபாய்தீனும் ,சிறப்பு பிரதியை  ஹன்டிக்கப்  இன்டநெசனல் நிறுவன பொறுப்பாளர் ஏ.ஜி.எம்.கலீலுல்  ரகுமானும் பெற்றுக் கொண்டனர் . விசேட பிரதியை  ஆசியா பௌண்டேசன்  பிரதேச இணைப்பாளர் எம்.ஐ.வலீத் பெற்றார்  .

நிகழ்வில்  முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துரையிடுக

 
Top