மதீனா பல்கலைக்கழகத்துக்கு  தெரிவான  கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்ற நட்பிட்டிமுனையை சேர்ந்த  மௌலவி ஏ. முகம்மது றிக்காஸ்  எதிர்வரும்   ஞாயிற்றுக் கிழமை  மதீனாவுக்கு பயணிக்கவுள்ளார் .
அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  அண்மையில்  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடை பெற்றது . வித்தியாலய அதிபர் ஜெஸ்மினா  ஹாரீஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினரும்  கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத்  பிரதம அதிதியாகவும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமுக சேவை அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் கௌரவ  அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவத்தை வழங்கினார்கள் .
கல்லூரி  ஆசிரியர்கள் மற்றும்   நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமுக சேவை அமைப்பின் செயலாளர் உட்பட அங்கத்தவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .
மௌலவி றிக்காஸ்  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது கருத்துரையிடுக

 
Top