68வது  தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி ,பிரதமர்  உள்ளிட்ட  நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு துஆ பிரார்த்தனையும் , நினைவு தின மர  நடுகை வைபவமும் , மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கும்  நிகழ்வும்  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  பழைய மாணவர் சங்கத்தின்  ஏற்பாட்டில்  இன்று நடை பெற்றது .

வித்தியாலய அதிபர்  ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினரும்  கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  தேசியக் கோடி ஏற்றி  தனது தந்தையின் நினைவாக நிர்மாணிக்கப் பட்ட கொடிக்கம்ப மேடையையும் திறந்து வைத்தார் 

இவ்வைபவத்தில்  பிரதி அதிபர் ,ஆசிரியர்கள்  உட்பட  பெற்றோரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமுக சேவை அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் மற்றும் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் ' 
கருத்துரையிடுக

 
Top