( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


விசயமறியாத 30 இற்கும மேற்பட்ட அப்பாவி சாரதிகள் பலர் இன்று  ( 7 ) அம்பாறை  வீதி போக்குவரத்து பொலிசாரின் தண்டனைக்கு உள்ளாகினர்
மாளிகைக்காடு சந்தி பல வகையிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.ஒரு புறம் பொத்துவில் தொகுதியையும் மறுபுறம் கல்முனைத் தொகுதியையும் , ஒரு புறம் கல்முனை பொலிஸ் பகுதியையும் மறுபுறம் , சம்மாந்துறை பொலிஸ் பகுதியையும் , ஒரு புறம் கல்முனை மாநகரசபை எல்லையையும் மறுபுறம் காரைதீவு பிரதேச சபையயும் , ஒரு புறம் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவினையும் , மறுபுறம் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவையும் கொண்டுள்ளது
மாளிகைா வீதி கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் முடிவடைகின்றது. இவ்வீதியனால் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். கடந்த சுனாமி அனர்தத்தின் பின்னர் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதானம் இருந்த இடத்தில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அமையப் பெற்றது. இவ் வைத்தியசாலைக்கு நோயாளிகள் வருவதற்கும் ஏனைய வாகனங்கள் வருவதற்குமாக பாதையொன்று பிரதான வீதி வழியாக அமைக்கப்பட்டது.
ஆனால் அந்த பகுதியை சுற்றுவட்ட பகுதியாக வீதி போக்குவரத்து பொலிஸார் தன்னிச்சையாக பிரகடனப்படுத்திக் கொண்டு பொது மக்களுக்கு எந்தவித முன்னறிவித்தலுமின்றி அந்த சுற்று வட்ட பாதையில் பயணிக்கும் வாகன சாரதிகளை நிறுத்தி வீதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளமையால் தண்டனைக்கு உட்படுத்துவதாக கூறி தண்டப்பணம் செலுத்துவதற்கான சிட்டுகளை வழங்கி வருகின்றனர்.
இவ்விடயம் சம்பந்தமாக இப்பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்தும் எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லையென தெரிவித்தனர்.

எது எவ்வாறு இருந்தாலும் ஒரு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன் அவ்விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இச் சுற்று வட்டம் சம்பந்தமா பிரதான வீதியிலோ அல்லது குறிப்பிட்ட இடத்திலோ எந்தவிதமான அடையாங்களோ வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துரையிடுக

 
Top