கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் குறைந்த வருமானங்களை உடைய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 225 பேருக்கு கல்விக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. 


மெஸ்றோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.ரஹீம்,பீ.எம்.வை அரபாத் , கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.ஏகாம்பரம், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவர்களுக்கான கொடுப்பனவுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் என்பவற்றை நிகழ்வின் பிரதம அதிதி டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் வழங்கி வைத்தார்.மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவ


ரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் அவர்களின் 5 மில்லியன் ரூபா நிதி உதவியின் மூலம் மெஸ்றோ நிறுவனம் இக்கொடுப்பனவை உயர்தர மாணவர்களுக்கு வழங்கி வைத்துள்ளது.இலங்கை மக்களின் கல்வியில் கரிசனை எடுத்து இன, மத வேறுபாடுகளின்றி உயர்தர மாணவர்களுக்கு இக்கொடுப்பனவை வழங்க முன்வந்த தனவந்தர் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் அவர்களை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட மெஸ்றோ நிறுவனத்தின் பிரதிநிதிகள், கல்முனை கல்வி சமூகம் என்பன ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.இந்நிகழ்வில் மெஸ்றோ நிறுவனமும், பாடசாலைகளும் ஒன்றிணைந்து டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்து, மெஸ்றோ அமைப்பின் தவிசாளராகவும் நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top