ஏ.எல்.டீன்பைரூஸ்


காத்தான்குடியை தளமாக கொண்டு இயங்கும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நிதியத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சுமார் மூன்று இலட்சம் 300000/= ரூபாய் பெறுமதியான இரண்டு குளிரூட்டிகள் மற்றும் மாபில் கற்கள் என்பன நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி)அவர்களினால் வைத்தியட்சகர் எம்.ஜாபிர் அவர்களிடம் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

காத்தான்குடி தள வைத்தியாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக மீடியா போரம் காத்தான்;குடி சம்மேளனம்,ஜம்இய்யத்துல்உலமா,தவ்வாஅமைப்புகள், பொது அமைப்புகள் என்பவற்றிடம் வேண்டிக் கொண்டதற்கமைவாக மேற்படி பொருட்கள் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நிதியத்தின்  மூலம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுழ்ழாஹ் நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியட்சகர் எம்.ஜாபிர்,காத்தான்குடி முன்னால் பிரதி நகர முதல்வர் எம்.ஜெசீம்,காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

காத்தான்குடி மீடியா போரத்தின் வேண்டுகோளை ஏற்று காத்தான்குடி தள வைத்திய சாலைக்கு மேற்படி உதவியினை வழங்கிய நிதியத்தின் தலைவர் மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) அவர்களுக்கு டாக்டர் ஜாபிர் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


கருத்துரையிடுக

 
Top