(யு.எம்.இஸ்ஹாக்) 
சம்பத் வங்கி அறிமுகம் செய்துள்ள வட்டியற்ற "மை பேங்க்" கணக்கு அட்டையை, சாய்ந்தமருதில் இன்று (01) மாலை அறிமுகம் செய்தது.


இம் "மை பேங்க்" கணக்கு அட்டைகள் சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட் நிறுவனத்தினூடாகவே வழங்கப்படவுள்ளன. மிகக் குறைந்த தொகையான 100 ரூபாயை செலுத்துவதன் மூலம் இவ்வட்டையை அஸ்லம் பிக் மார்ட் இல் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.சாய்ந்தமருது சம்பத் வங்கி கிளை முகாமையாளர் ஏ.எம்.பினோஸ்டிர் தலைமைல் இடெம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சம்பத் வங்கி பிரதம செயற்பாட்டதிகாரி திரு. நந்த பெர்னாண்டோ, கிழக்குப் பிராந்திய முகாமையாளர்களான திரு. என்.ஜெயசீலன், அன்ரன் டேவிட், அஸ்லம் பிக்மார்ட் அதிபர் அஸ்லம் ரியாஜ், வங்கியின் கிளை முகாமையாளர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.தலைநகருக்கு வெளியே இவ்வாறான "மை பேங்க்" கணக்கு அட்டையை அறிமுகம் செய்வது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத் தக்கது. கருத்துரையிடுக

 
Top