( எஸ்.எம்.எம்.றம்ஸான் )


நாட்டின் 68ஆவது சுதந்திர தினம், நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (04) கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மர நடுகளை நிகழ்வுகளும் இடம்பெற்றன.   

பாடசாலை அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் சுற்றாடல் கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட   இந்நிகழ்வில் பாடசாலையில் பிரதி,உதவி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.


கல்முனை குர்த்துபா அகடமியில் சுதந்திர தின விழா 


நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (04)   கல்முனை குர்த்துபா அகடமியில் தேசியக்கொடியேற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கு இனிப்புப்பண்டமும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

  அகடமியின் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.றம்ஸான் தலைமையில்  இடம் பெற்ற இந்நிகழ்வில்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top