(எம்.எம்.ஜபீர்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம் தலைமையில் இன்று காலை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலகத்திற்கு முன்பாக தேசியக்கொடி ஏற்றி, உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், கலைக்கலாச்சார  நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக  உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ஹூஸைமா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top