கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய 68வது  சுதந்திர  தின வைபவத்தையொட்டி விசேட நிகழ்வுகள்  இன்று (03)  பாடசாலைகளில்  நடை பெற்றது. 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  பாடசாலைகளின்  பிரதான நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடை பெற்றது . 
கல்லூரி அதிபர் எம்.சி.எம் .அபூபக்கர்  அவர்களின்  நெறிப்படுத்தலில்  வலயக் கல்வி அலுவலக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அரபாத் தலைமையில்  நடை பெற்ற  நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக்  கொடியை ஏற்றி வைத்தார் .

வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  வீ.மயில் வாகனம் , எஸ்.எல்.ஏ.ரஹீம் ,கணக்காளர்  எல்.ரீ.சாலிதீன் ,நிருவாக உத்தியோகத்தர் திருமதி  ஜீ .பரம்சோதி  உட்பட  ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்  ,கல்லூரி  ஆசிரிய ர்கள் ,மாணவர்கள்  என பலர் கலந்து கொண்டனர் .வலயக் கல்விப் பணிப்பாளர்  அப்துல் ஜலீல்  , பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பீ.எம்.வை அரபாத்  ஆகியோரால்  தேச விடுதலைக்காக  பாடு பட்டவர்களை  நினைவு கூர்ந்து  உரை நிகழ்த்தப் பட்டது 

கருத்துரையிடுக

 
Top