திவிநெகும திணைக்களத்திற்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு  விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது இதற்கான  போட்டிப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான  விஷேட செயலமர்வு  இம்மாதம்(பெப்ரவரி) 27,28ஆம் திகதிகளில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடாத்துவதற்கு எற்பாடு செய்யப்பட்டள்ளது.
இந்த செயலமர்வில் திவிநெகும மற்றும் சமூர்த்தித் திட்டங்களில் நீண்ட கால அனுபவத்தைப்பெற்ற அதிகாரிகளும்; மற்றும்; பொது அறிவு , பொது உளச்சார்பு ஆகியவற்றில் மிகவும் திறமைவாய்ந்தவர்களும்  வளவாளர்களாகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
இந்த செயலமர்வில் பங்குபற்றுவதன் மூலம் போட்டிப் பரீட்சையில் சிறந்த பேறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள  முடியும் இதன் மூலம் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்.    
மருதமுனை கலை,இலக்கிய அபிருத்திச் சங்கம் இந்தச் செயலமர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது  குறிப்பிட்ட அளவு  ஆசனங்களே ஒதுக்கப்படடுள்ளதால் பின்வரும்(0779042115மருதமுனை பாஹிம்  ஜூவலரி, பி.எம்.எம்.ஏ.காதர் 0772612095) ஆகிய தொலைபேசி இலக்கங்களோ  தொடர்பு கொண்டு  முன் பதிவுகளைச் செய்து கொள்வதன் மூலம் இந்தச் செயலமர்வில் பங்கு பற்றி பயன் பெறமுடியும்.  
கருத்துரையிடுக

 
Top