கல்முனை வர்த்தக வங்கி (Commercial Bank) கிளையில் அரு நெலு  சிறுவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள  கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த நான்கு மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு  வங்கி முகாமையாளர் ஜே.எம்.சித்தீக் தலைமையில் சமீபத்தில் இடம் பெற்றது.
முகாமையாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  குறித்த நான்கு மாணவர்களான பால சுந்தரம் கோவர்சனன் ,கங்காதரன் டிரோஜன் ,கோவணன் சலுஜிந்த் ,முஹம்மது நியாஸ் மிஸ்பார்  ஆகியோர்  பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் .
நிகழ்வில் உதவி முகாமையாளர் ஐ.எம்.பாயிஸ், மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள்  உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கருத்துரையிடுக

 
Top