ஏ.பி.எம்.அஸ்ஹர்
பாடசாலையில் இணைக்கப்பட வேண்டிய உரிய வயதை அடைந்தும் வறுமை காரணமாக இதுவரை பாடசாலையில் இணைக்கப்படாமல் இருந்த பிள்ளைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கான பாடசாலை  கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு   இன்று கல்முனை பிரதேச செயலகத்தில்  இடம் பெற்றது.
பிரதேச செயலாளர். எம்.எச்.எம்.கனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதற்கான  இணை அனுசரணை வழங்கிய அகில இலங்கை முஸ்லிம் அஸ்ஸொசியெசனின் மருதமுனை கிளையின் முக்கியஸ்தர்கள் மற்றும் அகாஸ்  நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் . 

கருத்துரையிடுக

 
Top