2015 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயத்தில் தேசிய மட்டத்திலும் ,மாகாண  மட்டத்திலும் விளையாட்டுப் போட்டிகளில்  திறமை காட்டி சாதனை படைத்த மாணவ வீர வீராங்கணைகளையும் , விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  இன்று  நடை பெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி  மண்டபத்தில் இடம் பெற்ற   இந்நிகழ்வில்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதியாக  கிழக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாமும்  கலந்து கொண்டனர் .

கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில் சாதனை படைத்த 230 விளையாட்டு வீர வீராங்கணைகள் பாராட்டி கௌரவிக்கப் பட்டதுடன்  விளையாட்டு துறையில் சாதனை படைத்த ஆசிரியர்களும் பதக்கம் சான்றிதழ்  வழங்கி கௌரவிக்கப் பட்டனர் 
நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் ,அதிபர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் . 
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
வெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரனினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் பாடசாலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கருத்துரையிடுக

 
Top