( அப்துல் அஸீஸ்)

அல் அமீன் முன் பள்ளி வலையமைப்பின் வருடாந்த கலை, கலாசார நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும்  நேற்று மாலை (3) கல்முனை சாஹிரா  தேசிய பாடசாலை காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கல்முனை,சாய்ந்தமருது பிரதேசங்களை சேர்ந்த அல் அமீன் முன் பள்ளி வலையமைப்புக்குட்பட்ட நான்கு பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கெளரவிப்பும்  இடம்பெற்றது.

அல் அமீன் முன் பள்ளி வலையமைப்பின் தலைவர் எம்.எ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வுகளில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞனபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எ.எம்.ரஸ்மி கலந்துகொண்டதுடன், 

அதிதிகளாக முன் பள்ளி கல்விப்பிரிவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம்.அனீஸ்,  விமானப்படை அலுவலக முன்னாள் அதிகாரி எ.எம்.தமீம், தேசிய கல்விக்கல்லூரி முன்னாள்  சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top