(அகமட் எஸ். முகைடீன்)

திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பராளுமன்றத் தேர்தல் 2015ல் போட்டியிட்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம்.நபீல் இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனால் இன்று (18) நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் இடம்பெற்ற மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் லக்சல நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்  மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்றாவது பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top