( யு.எம்.இஸ்ஹாக் )

கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணியாற்றுபவர்களை  பாராட்டி சான்றிதழ்  வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று  சனிக்கிழமை  2016-01-09 ஆம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கப்பார் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.எல். ரணவீர கலந்து கொண்டு சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் முன்னிலையில் உரையாற்றி  சான்றிதழ்களும் வழங்கி வைத்தார் .
கௌரவ அதிதியாக கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேன , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்.றயீஸ் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாருக் ஆகியோரும் கலந்து கொண்ட அதேவேளை சமயத் தலைவர்களும் அரச உயர் அதிகாரிகளும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை பொலிஸ் பிரிவின் மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிடின் நெறிப்படுத்தலில்  நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
கருத்துரையிடுக

 
Top