உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு  கல்முனை பொலிசாரின் விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய  மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள்யு .ஏ.கப்பார் தலைமையில்  இன்று  (28) கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் இடம் பெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட அனைத்து பொலிஸ்  அதிகாரிகளும் பொலிஸ்  நிலையத்தில் இருந்து கால் நடையாக கல்முனை வடக்கு  ஆதார வைத்திய சாலைவரை சென்று  மீண்டும் கல்முனை நகரை அடைந்து கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் உடற் பயிற்சியில் ஈடுபட்டனர் 
கருத்துரையிடுக

 
Top