(அப்துல் அஸீஸ்)


கல்முனை நகரத்தையும், கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட குடிருப்பையும் இணைக்கும் பாதையில் குப்பைகள் குவிந்து அகற்றப்படாமல்லிருப்பதனால் தாம் மிகுந்த அசெளகரியத்துக்குள்ளாகி  உள்ளதாக அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்விடயம் தொடர்பாக கல்முனை  கிரீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட ஆதன முகாமைத்துவ சபையின் செயலாளர் ரி.ஆர்.அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில் 'எங்களது  கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்  சுனாமிப் பேரலையினால் பதிக்கப்பட்ட சுமார் 530 குடும்பங்கள் 452வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் கல்முனை நகரத்தை பல தேவைகள் நிமிர்த்தம் இலகுவாக சென்றடைய இப்பாதையினையே  பயன்படுத்துகின்றனர். ஆயினும் இப்பாதையானது குப்பைகள் குவிந்து அகற்றப்படாமல்லிருப்பதனால் சுகாதாரத்துக்கு கேடான சூழல் உருவாகியுள்ளதுடன், மிருகங்களின் அச்சுறுத்தலும் இவ்வீதியில் காணப்படுகின்றது.

இது  தொடர்பாக கல்முனை மாநகர சபையிடம் அறிவித்தும் முறையான எவ்வித வேலைத்திட்டமும் இன்னும் மேற்கொள்ளப்பட வில்லை என தெரிவித்தார்'. 

இவ்விடயம் பற்றி  கல்முனை மாநகர சபை அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பதிலளித்த பொதியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப் படாத நிலையில்  இன்று பலத்த மலை காரணமாக பிர  தேசத்தில் துர் வாடை வீசுவதுடன்  சுகாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது . 

கருத்துரையிடுக

 
Top