(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில்  நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் சகல செயற்பாடுகளிலும் அமைச்சருடன் இணைந்து செயற்படவேண்டிய அமைச்சின் மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியாகும். அப்பதவியினை கட்சி மற்றும் தலைமையின் நம்பிக்கைகும் விசுவாசத்திற்கும் உரித்தான இளமையும், துடிப்பும், விவேகமும், செயல்திறனும் மிக்க சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் குறித்த அமைச்சு தொடர்பான சகல நடவடிக்கைகளும் அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கருத்துரையிடுக

 
Top