க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையும்,  கல்முனை சாகிரா தேசிய பாடசாலையும் வெவ்வேறு துறைகளில்  மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
அதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் ம.சாரூஷன்,  கலைப்பிரிவில் டிலுக்ஷனா ஆகிய இரு மாணவர்களும் 3ஏ சித்திகள் பெற்று  முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியபாடசாலை  மாணவன் என்.எச்.எம்.சாதிர் முதலாமிடத்தினையும்,  அதே கல்லூரி மாணவர்களான எஸ்.எச்.சஜாத் இயந்திரவியல் தொழில் நுட்பப்பிரிவிலும்,  ஜெ.டீ.ஹிக்மத் உயிரியல் தொழிநுட்பப்பிரிவில் முதலாமிடத்தினையும் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த இரு பாடசாலைகளுக்கும் சென்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் சாதனை படைத்த மாணவர்களையும் ,அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டினார் .

 நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயிவாகனமும் கலந்து கொண்டார் .க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையும்,  கல்முனை சாகிரா தேசிய பாடசாலையும் வெவ்வேறு துரைகளில்  மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.


கருத்துரையிடுக

 
Top