மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை நட்பிட்டிமுனையில்  பல்வேறு  நிகழ்வுகள் நடாத்துவதற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  நடவடிக்கை எடுத்துள்ளது .

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின்  கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்  சி.எம்.ஹலீம் தலைமையில்  நட்பிட்டிமுனையில் உள்ள பாடசாலைகள் ,மற்றும் பள்ளிவாசல்களில்  மரக்கன்றுகள்  நடப் படுவதுடன் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும்  வழங்கப் படவுள்ளது. 

கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சி.எம்.முபீத்  இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு  சிறப்பிக்கவுள்ளார் .

 கொடுங்கோல் ஆட்சியின்  அமைச்சுப் பதவியை தூக்கி வீசிவிட்டு  மக்களோடு மக்களாக  மைத்திரி நல்லாட்சியை  கொண்டுவர பாடுபட்ட  கட்சியின் தலைவரும் அமைச்சருமான  றிஷாத்  பதியுதீன்  மேலும் சக்தி பெற  நாளை  நற்பிட்டிமுனை தையல் பயிற்சி  நிலையத்தில் துஆ பிரார்த்தனையும்  இடம் பெறவுள்ளது.  

கருத்துரையிடுக

 
Top