(அப்துல் அஸீஸ், ரம்ஸான்  )சுனாமியால் பாதிக்கப் பட்ட கல்முனைக்குடி மக்கள் வாழும் கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீடுத்திட்டத்தில்  அப்பகுதி மாணவர்களின்  நலன் கருதி நிர்மாணிக்கப் பட்ட  பொது நூலகம் மற்றும் முன்பள்ளி திறப்பு விழா நிகழ்வுகள் நேற்று  மாலை கல்முனை கிரீன் பீல்ட் வளாகத்தில் இடம்பெற்றது.

நவீன முறையில் கானொளி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய சகல வசதிகளையும்  கொண்ட  முன்பள்ளிக்கான   சுமார்  6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டினை    கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் ரஸாக், மற்றும் கிரீன் பீல்ட் சுனாமி வீடுத்திட்டத்தின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் , தனவந்தர்கள்  சிலரும்  வழங்கியிருந்தனர்.

கல்முனை கிரீன் பீல்ட் சுனாமி வீடுத்திட்ட முகாமைத்துவ சபைத்   தலைவர் எ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்   பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி பொருளாளருமான  கே.எம்.அப்துல் ரஸாக், கெளரவ அதிதியாக  கல்முனை வலயக் கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்துகொண்டதுடன், விசேட  அதிதிகளாக பிரதி  கல்விப்  பணிப்பாளர்  எஸ்.எல்.எ.ரஹீம், முன்பள்ளிக்குப்  பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்  எ.எல்.எம்.சக்காப் ஆகியோர்கள் உட்பட பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top