கல்முனை வலயக் கல்வி அலுவலக  நலன் புரிச்சங்கம் ஏற்பாடு செய்த  ஒன்று கூடலும்  பாராட்டு விழா வைபவமும்  இன்று ஞாயிற்றுக் கிழமை  நிந்தவூர் அட்டப்பள்ளம் இஸ்மாயில் மாஸ்டர் தோட்டத்தில் நடை பெற்றது.

நலன்புரிச் சங்கத்தின் தலைவரும்  முகாமைத்துவ உதவியாளரும் ஊடகவியலாளருமான யு. முஹம்மட்  இஸ்ஹாக்  அவர்களின் நெறிப்படுத்தலில்  வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகான கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாகவும் , வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  கௌரவ அதிதியாகவும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.ரஹீம் , ஏ.எல்.எம்.முக்தார் ,பீ.எம்.வை.அரபாத் , பொறியியலாளர் ஜீ .அருண் ,நிருவாக உத்தியோகத்தர்  திருமதி ஜி. பரம்சோதி ஆகியோர்  சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .

கடந்த  2015 ஆம் ஆண்டு  வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற 8 உத்தியோகத்தர்களும் , 2016ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற 9 உத்தியோகத்தர்களும்  நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப் பட்டதுடன் . கடந்த ஆண்டு  ஓய்வு பெற்றுச் சென்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக்  பொன்னாடை போர்த்தி  நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற 70க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும்  பரிசுகள் வழங்கப் பட்டதுடன்  நிகழ்வில் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன . ஓய்வு  பெற்ற முன்னாள் நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைதீன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில்  மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் பட்டன .
நட்பிட்டிமுனையை சேர்ந்த அறிவிப்பாளர் வ .மக்பூல்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கல்முனை இசைவாணன் கபூர், ஆசிரியர் நசீர் ஆகியோர் இன்னிசை  கீதம் வழங்கி வந்திருந்தோரை மகிழ்வித்தனர் .கருத்துரையிடுக

 
Top