மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால் 2015ஆம் ஆண்டுக்கான“சமாதானத் தூதுவர்” விருது வழங்கி கெரவிக்கப்பட்டார். ஊடகத்துறையின் மூலம் இன நல்லுறவுக்கும்,சமாதானத்திற்கும் இவர் ஆற்றிவரும் பெரும் பங்களிப்புக்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு  இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் சம்மாந்துறை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.இதன் போது இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இந்த “சமாதானத் தூதுவர்” விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டொக்டர் ஐ.எல்.அப்துல் மஜீட்,கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,கெப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் காலிம் இம்தாத்,வர்த்தகர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


கருத்துரையிடுக

 
Top