ஏ.பி.எம்.அஸ்ஹர்

கல்முனை பிரதேச செயலகத்தின்  கிராம  உத்தியோகத்தர்களுக்கான பதில் நிருவாக உத்தியோகத்தராக கல்முனையை சேர்ந்த  எம்.ஐ.உதுமாலெப்பை  நியமிக்கப்பட்டுள்ளார்.


1978ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர் கல்முனைக்குடி 2.4.மற்றும் 12ஆம் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.இதுவரை கிராம உத்தியோகத்தர்களுக்கான  நிருவாக உத்தியோகத்தராகக்கடமையாற்றி வந்த  ஏ.எச்.ஏ.லாஹிர்  அண்மையில் ஒய்வு பெற்றுச் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர்   நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top