(அப்துல் அஸீஸ்,யு.எம்.இஸ்ஹாக் )


.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய ல்முனைமாநகரம்  உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும் ஆய்வு நூல் அறிமுக  விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும்  சனிக்கிழமை மாலை கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஓய்வுநிலை அதிபரும், பிரதிக்கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ், விசேட அதிதிகளாக மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, சாய்ந்தமருது  பிரதேச செயலாளர் எ.எம்.சலீம், கல்முனை வலயக் கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஆகியோர்கள்  கலந்து சிறப்பித்ததுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் பிரதிநிதிகள், மநகர சபை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நூல் பற்றிய உரைகளை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ். அனுசியா  சேனாதிராஜா, எம்.எம்.பாசில் ஆகியோர்கள் நிகழ்த்தினர்.கருத்துரையிடுக

 
Top