அமைச்சர் ரஊப் ஹக்கீமின் சகோதரர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து உருவான வெற்றிடத்திற்கு, எம்.எஸ். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியினால் வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் வெற்றிடமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த விடயம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்நியமனம் வழங்கப்பட்டதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இன்று (23) தெரிவித்தார்.
 
கடந்த 2000-2004 காலப்பகுதியில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட இவர், முன்னாள் உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சராவார்.


கருத்துரையிடுக

 
Top