(பி.எம்.எம்.எ.காதர்)

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.இங்கு 44 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றி 42 மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர் இம் மாணவிகளில் 5 மாணவிகள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’சித்திகளைப் பெற்றுள்ளனர்.

17 மாணவிகள் 2 ஏ,பி சித்திகளையும்,5 மாணவிகள் 2 ஏ,சி சித்திகளையும்,4 மாணவிகள் ஏ,பி ,சி சித்திகளையும்  பெற்றுள்ளனர்.எம்.ஏ.நுஹா,எம்.ஜே.அனீகா, எம்.எச்பாத்திமா சஜ்னா, சி.என்.சசீஎம்,எச்.அக்மா ஆகிய மாணவிகளே 3 பாடங்களிலும் ‘ஏ’சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரி முதல்வர் கலாநிதி அஷ்சேய்க்  எம்.எல்.முபாறக் மதனி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top