(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேச செயலகத்தின் வருட இறுதி இனிய விழா நிகழ்வுகள் நேற்று  மாலை  பிரதேச செயலகத்தின் மருதமுனை கலாசார மண்டபத்தில்இடம்பெற்றது.

கலை,கலாசார நிகழ்வுகள் உள்ளடங்கியதாக இடம்பெற்ற இன் நிகழ்வில்   கல்முனை பிரதேச செயலகத்தில் கடைமையாற்றி ஓய்வு பெற்றவர்களும், இடமாற்றம்பெற்று சென்றவர்களும் இதில்   கெளரவித்து பாராட்டப்பட்டனர்.


கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும், பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் செயலாளருமான எ.பி.எம்.அஸ்ஹரின் ஒருங்கிணைப்பில்    கல்முனை பிரதேச செயலாளரும்,   பிரதேச செயலக நலனோம்பல் அமைப்பின் தலைவருமாகிய  எம்.எச். முகமட் ஹனி தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள்,அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top